பலம் தரும் பழைய சாதம்

என்னதான் தற்போது துரித உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டாலும் பழைய சாதத்துக்கு என்றுமே தனி ரசிகர்கள் உண்டு.
காலையில் சமைத்த சாதம் மீதியாக இருந்தால் அதனை தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால் அடுத்த நாள் பழைய சாதமாக மாறிவிடும்.
இந்த பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் தான் எத்தனை எத்தனை.
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக்குகிறது.
இதற்கு தொட்டுக்கொள்வதற்கு குழம்பு ஒன்றும் தேவைப்படாது. ஒரு சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் போதும். சத்துக்கு குறைவில்லாத பழைய சாதம் சுவைக்கும்.
பொதுவாக நீராகாரத்தில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள் அதிகம். இது மலச்சிக்கலை நிவர்த்தி செய்கிறது. தோல் வியாதிகளை சரியாக்குகிறது. வயிற்றுப் புண்களை சரி செய்கிறது.
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. இளமை தோற்றத்துக்கு வித்திடுகிறது.