அங்கத் துடிப்பு கூறும் பலன்கள்
கண், கால்கள், விரல் போன்றவை சில நேரங்களில் நமது கட்டுப்பாட்டையும் மீறி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கு சில பலன்கள் இருப்பதாகக் கூறுவார்கள். அதன்படி, அங்கங்கள் துடிக்கும்பொழுது அதற்கான பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
அதன்படி உச்சியின் வலது பக்கம் துடித்தால் பயம். அதுவே இடது பக்கம் துடித்தால் பெருமை. தலையின் பின்பகுதி துடித்தால் சத்துருக்களின் தொல்லை உண்டாகும்.
நெற்றியின் இடப் பக்கம் துடித்தால் சம்பத்து உண்டாகும். வலது பக்கம் துடித்தால் நோய் தீரும். வலப் புருவம் துடித்தால் பெருமை சேரும். இடப் புருவம் துடித்தால் தீமை.
வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு ஆபத்து ஏற்படும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் துன்பம் வந்து மாறும். கண்ணின் முன் குவளை துடித்தல் புகழ் மற்றும் செல்வம் உண்டாகும்.
மூக்கின் வலப் பக்கம் துடித்தால் சம்பத்து உண்டாகும். இடப் பக்கம் துடித்தால் செல்வம் கிடைக்கும். மேல் உதடு துடித்தால் நற்செய்தி கிடைக்கும். கீழ் உதடு துடிததால் ஏதேனும் தின்பண்டங்கள் உண்பீர்கள்.
பிடரியின் வலது பக்கம் துடித்தால் நன்மை வந்து சேரும். இடது பக்கம் துடித்தால் பெருமை. முதுகு துடித்தால் செல்வம் வந்து சேரும்.
வலது முழங்கை துடித்தால் தவப் பயணம் செய்வீர்கள். இடது முழங்கை துடித்தால் தனம் வந்து நேரும்.
வலது கண்டக் கை துடித்தால் தோஷம் நீங்கும். இடது அகங்கை துடித்தால் இலாபம்.
வலது கையின் பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் துடித்தால் இலாபம். நடுவிரல் துடித்தால் நற்செய்தி. மோதிர விரல் துடித்தால் பெருமை. சிறுவிரல் துடித்தால் மரணச் செய்தி. வலது கையின் அடி துடித்தால் எடுத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.
இடது கையின் நடுவிரல் துடித்தால் பெருமை. மோதிரவிரல் துடித்தால் நன்மை.