மவுசு குறையாத ‘அரிக்கேன் விளக்குகள்’
![மவுசு குறையாத ‘அரிக்கேன் விளக்குகள்’ மவுசு குறையாத ‘அரிக்கேன் விளக்குகள்’](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Brass_Hurricane_Lanterns_Snow_5.jpg)
எத்தனையோ விதவிதமான மின்விளக்குகள் நம் வீட்டை அழகுபடுத்தினாலும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய அரிக்கேன் விளக்குகளுக்கு அது ஈடாகாது.
ஆரம்பக் காலகட்டத்தில் சிம்னி விளக்கு எனப்படும் சிறிய விளக்குகளே மக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் காணாமல் இருந்ததால் அடுத்து பயன்பாட்டுக்கு வந்தது அரிக்கேன் விளக்குகள்.
பிரிட்டன் நிறுவனமொன்றினால் இந்த விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வளவு பெரிய காற்றடித்தாலும் இந்த விளக்குகள் அணையாமல் எரிந்தன. இதனை லந்தர் விளக்கு என்றும் அழைத்தார்கள். மின்சாரம் இல்லாத காலகட்டத்தில் இரவு நேரப் பாதுகாப்பைத் தந்தது இந்த அரிக்கேன் விளக்குகள்தான்.
வீடு குடிபுகும்போது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு இந்த விளக்குகள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் கூட இதனை எடுத்துச் செல்வார்கள். காரணம் எந்தக் காற்றையும் தாங்கும் சக்தி இதற்கு அதிகமாகவே உண்டு.