ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கில் சந்தேக நபர்களாக ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டிருந்த நிலையில், குறித்த அனைவரும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு ஜூன் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )