இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்

இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்

நமது வீட்டின் அமைப்பு மட்டுமில்லாமல் வாங்கி வைக்கும் பொருட்களும் நமக்கு மகாலட்சுமியின் அருளைத் தரக்கூடியது. அதன்படி எந்த நாட்களில் வீட்டுக்கான துடைப்பம் வாங்கலாம் எந்த நாட்களில் துடைப்பம் வாங்கக்கூடாது என தெரிந்துகொள்வோம்.

பொதுவாக துடைப்பம் என்பது அதிர்ஷ்டமான ஒரு பொருளாக கருதப்படுகிறது.

அதன்படி, வீட்டுக்கு துடைப்பம் வாங்க நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வாங்கினால் சிறந்தது. இந்த நாட்களில் வாங்குவதால் லட்சுமி தேவியின் நல்லாசி வாழ்வில் நிலைத்திருக்கும்.

வாங்கிய துடைப்பத்தை நம் இஷ்டப்படி வீட்டில் எல்லா இடத்திலேயே வைத்துவிடக் கூடாது. வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

ஆனால், எப்பொழுதும் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையில் துடைப்பத்தை வைக்கக்கூடாது.

அதன்படி, திங்கட்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், பணவரவு குறையும். கடன் அதிகரிக்கும்.

அதேபோல் சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதையும் தவிர்க்க வேணடும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போவதாக கூறப்படுகிறது. அத்துடன் சனி பகவானின் கோபத்துக்கும் ஆளாகவேண்டி வரும்.

Share This