கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான்,
கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட கலைஞர் என்ன செய்தார். கச்சதீவு கொடுக்கப்பட முன்னர் அதுகுறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன.
இந்தியமும் திராவிடமும் தமிழனத்துக்கும் தமிழத் தேசியத்துக்கும் எப்போதும் எதிரான என்பதை இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் உறுதியாக கச்சதீவு மீட்கப்படும். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
கச்சதீவை இந்தியா மீட்காவிடின் தமிழ்நாடு பிரியும். சிங்களவர்கள் நண்பர்கள் என்றாம் நாம் யார் எனக் கேள்வியெழுப்புகிறோம். அவர்கள்தான் முக்கியம் என்றால், எம்மை பிரித்து விடுங்கள் எனக்டி கோருவோம். இந்திய விடுதலைக்காக போராடியது தமிழர்கள். எம்மைவிட அவர்கள்தான் முக்கியம் என்றால், அவர்களுடன் இந்தியா நட்பு பாராட்டிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார்.