
டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை
டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளி தாக்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நெறிமுறைகளின் கீழ் மேலும் தேடுதல் நடவடிக்கைகள் தேவையற்றவை.
எவ்வாறாயினும், டித்வா பேரிடரால் காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை 2004 சுனாமிக்கு இணையானது எனவும், சுனாமியின் பின்னர் 5,000 க்கும் மேற்பட்டோர் இன்றுவரை காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, டித்வா சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது. அண்மையில் கூடுதலாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தபோது இந்த பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காணாமல் போனதாகக் கூறப்படும்வர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும், 6,431 பேர் இடம்பெயர்ந்து, மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்களில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
கூடுதலாக, 45,056 குடும்பங்களைச் சேர்ந்த 155,255 பேர் தற்போது உறவினர்கள், நண்பர்கள் அல்லது மாற்று இடங்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
