Author: admin
தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி யாழ் மாவட்டத்தில் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று (06)போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு ... Read More
திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு
மாத்தறை - திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பாடசாலையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் பந்து வீழ்ந்துள்ளது. ... Read More
கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட Methamphetamine – இந்த வாரத்திற்குள் ஆய்வறிக்கை வௌியிடப்படும்
கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் Methamphetamine என சந்தேகிக்கப்படும் இரசாயனப்பொருள் தொடர்பான ஆய்வறிக்கை, இந்த வாரத்திற்குள் வௌியிடப்படுமென தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. குறித்த இரசாயனப்பொருள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் ... Read More
பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை ... Read More
இந்தியாவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 90,000 ஐ அண்மித்தது
தமிழகத்தின் சென்னையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கிராமுக்கு 110 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாவுக்கும் பவுணுக்கு 880 ரூபா உயர்வடைந்து ஒரு ... Read More
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில ... Read More
ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு
கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அக்குரெஸ்ஸவின் கானத்தொட்ட பகுதியைச் சேர்ந்த ... Read More
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ... Read More
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் ... Read More
விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தங்காலை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ... Read More
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் ... Read More












