Author: admin
உப்பு இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, ... Read More
வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது
அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் ... Read More
சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ... Read More
வாகனங்களை விற்பனை செய்ய அவசரப்பட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தமாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பஸ்கள் மற்றும் ... Read More
கனடாவில் இந்திய மாணவன் படுகொலை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டில் கற்று வந்துள்ளார். சர்னியா பகுதியில் ... Read More
முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடின்றி பெறலாம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More
மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் – ஏமாற்றத்தில் மக்கள்
எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். நீர் மின் உற்பத்தியும் உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ... Read More
தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும்
ரசிய – உக்ரெயன் போர், இஸ்ரேல் – காசா போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உலக அரசியல் ஒழுங்குகளும் குழப்பியுள்ளன. தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட வளர்முக மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தென்கொரிய ... Read More
03 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 03 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் ... Read More
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 68 வீதமானவர்கள் தொற்றை மற்றுமொருவருக்கு ஏற்படுத்தக்கூடும் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா ... Read More












