Author: admin
மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30 முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்
துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது. சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் ... Read More
ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். அங்கு வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜேர்மனியில் வசிக்கும் பல இலங்கை ... Read More
2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய ... Read More
கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவிப்பு
கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை இந்த மாதத்திற்குள் மீண்டும் தினசரி இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் ... Read More
வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது
வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ... Read More
கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக நிகழக்கூடிய 722 இடங்கள் ... Read More
சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை
சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
இந்தியாவில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை
தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் ... Read More
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்
குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை ... Read More
அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More












