Author: admin

கிரேன்ஜ்மவுத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பிரித்தானியாவின் புதிய தீர்மானம்

admin- November 24, 2025

 ஸ்காட்லாந்தின் கிரேன்ஜ்மவுத் (Grangemouth) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு £14.5 மில்லியன் பவுண்ட்கள் முதலீட்டை வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது, ஆனால் ... Read More

கடுகண்ணாவை மண்சரிவு -ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை

admin- November 24, 2025

கடுகண்ணாவை, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள வீதியின் ஒரு பகுதியை ஓரிரு நாட்களில் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ... Read More

கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

admin- November 24, 2025

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான ... Read More

கொலை சம்பவம் – பத்து பேருக்கு மரண தண்டனை

admin- November 24, 2025

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. எம்பிலிப்பிட்டியவின் முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒருவரை ... Read More

சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்

admin- November 24, 2025

சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மொழி, மத அரசியல் செய்வதை விட்டு ... Read More

விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது

admin- November 24, 2025

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 5 கிலோகிராம் நிறையுடையது என சுங்கத் ... Read More

கனடா, சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

admin- November 24, 2025

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் சந்தேக நபர்கள் ... Read More

மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் – பல விசேட நன்மைகள்

admin- November 24, 2025

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

admin- November 24, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்மித்த மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான ... Read More

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் ஆரம்பம்

admin- November 24, 2025

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ... Read More

பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் மாயம்

admin- November 24, 2025

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணாமற்போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் எனத் ... Read More

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது சரிந்து வீழ்ந்த மரம் – ஒருவர் பலி

admin- November 24, 2025

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலகொல்ல பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு (23) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை உட்பட ... Read More