
T20 உலக கிண்ணத்தில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறியது அவுஸ்திரேலியா
சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.
2026 T20 உலக கிண்ணத்தின் 32ஆவது லீக் போட்டி சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் நேற்று (17) நடைபெற இருந்தது.
ஆனால் பல்லேகலேவில் கனமழை பெய்து கொண்டிருந்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமலே போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 புள்ளிகள் பெற்று சிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
B பிரிவில், ஏற்கனவே 6 புள்ளிகளுடன் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
மேலும், ஏற்கனேவே சிம்பாப்வே மற்றும் இலங்கையிடம் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலிய அணி 2 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
ஓமனுக்கு எதிரான கடைசி போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடமே பிடிக்கும். இதனால் அவுஸ்திரேலியா லீக் சுற்றிலே T20 உலக கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
