டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றிக்கொண்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 18 பந்துகள் மீதமிருக்க மூன்று விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

பாசெட்டெரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவுசெய்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த அணி சார்பில் ஷிம்ரோன் ஹெட்மியர் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் பென் த்வார்ஷுயிஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 173 மூன்று ஓட்டங்களை குவித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.

மிட்செல் ஓவன் 37 ஓட்டங்களையும், கெமரூன் கிரின் 32 ஓட்டங்களையும், டிம் டேவிட் 30 ஓட்டங்களையும் குறைந்த பந்துகளை சந்தித்து பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் அகேல் ஹோசின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை அவுஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக பென் த்வார்ஷுயிஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்ட நாயக விருது கெமரூன் கிரினுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This