இந்தியாவிலிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சி தோல்வி

இந்தியாவிலிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சி தோல்வி

இந்தியாவில் சிவப்பு அரிசி கிடைக்காததால் அங்கிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அவர்,

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க சிவப்பு அரிசியை இறக்குமதி செய்ய இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடிது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது.

இந்தியாவில் சிவப்பு அரிசி உற்பத்திகள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இந்த நிலைமையை எப்படியாவது சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கடந்த அரசாங்கம் சிவப்பு அரிசியை இலவசமாக விநியோகித்தமையே பற்றாக்குறைக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

Share This