சாட் நாட்டில் ஜனாதிபதி மாளிகையில் தாக்குதல்…19 பேர் உயிரிழப்பு
இராணுவ ஆட்சி நடைபெறும் ஆபிரிக்க நாடான சாட்டில் அண்மையில் நடந்த தேர்தலில் இராணுவ அதிகாரி முகமது டேபே இட்னோ ஜனாதிபதியா தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தலைநகர் நஜ்மேனாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கத்தி, துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலுக்கு அங்கிருந்த பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பில் 18 பேரும் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர்.
அந் நகரிலுள்ள இளைஞர்கள் சிலர் போதையில் செய்த செயல் இது அதற்கு பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர் என சாட் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.