பிரபல பாடகர் நதிமல் பெரேரா மீது தாக்குதல்
பிரபல பாடகர் நதிமல் பெரேரா நேற்றிரவு (06) பாணந்துறை வடக்கு, கோரகனாவில் உள்ள விழா மண்டபமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ள4ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை அரச பாடசாலையொன்றினால் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பாடகர் நதிமால் பெரேரா அதே நிகழ்வு மண்டபத்தில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொண்ட நபரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதலை சமரசம் செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்த மற்றுமொருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.