
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு பொலிஸ் அதன் வலிமையை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலம் தழுவிய நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.
அனைத்து குற்றவாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.
