கனடாவில் ஆதவன் வானொலி!

கனடாவில் ஆதவன் வானொலி!

பிரித்தானியாவைத் தொடர்ந்து ஐரோப்பா, இலங்கை மற்றும் கனடாவில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கும் ஆதவன் வானொலி, தற்போது தனது Mobile App இல் CANADA தேசத்துத் தமிழ்ச் சொந்தக்களுக்காக அவர்களது நேர வலயப்படி ஆதவன் ஒலிபரப்பைக் கேட்கக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த Mobile App மற்றும் ஆதவனின் இணையத்தளம் என்பன நேயர்களின் Time Zone மற்றும் நாடு என்பவற்றைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக வழங்குகின்றன.

தமிழ் வானொலி வரலாற்றில் நாடுகள் மற்றும் Time Zone இற்கு ஏற்றவாறு பிரத்தியேக ஒலிபரப்பினை வழங்கும் தொழிநுட்பத்தை முதன்முதலாக அறிமுகம் செய்ததில் லைக்காவின் (LYCA MEDIA) ஆதவன் ஊடக வலையமைப்பு முன்னோடியாகத் திகழ்கின்றமை நீங்கள் அறிந்ததே!

அந்தவகையில் CANADA உறவுகள் Athavan Radio AppஇனைDownload / Update செய்து ஆதவனின் பிரத்தியேக ஒலிபரப்பினைக் கேட்கமுடியும்.

தற்போது பரீட்சார்த்த ஒலிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் புதிய மாற்றங்களோடு ஒலிக்கவிருக்கிறது.

இதன்மூலம் CANADA வாழ் விளம்பரதாரர்களும் தமது வாடிக்கையாளர் இலக்கினை குறிப்பாகத் தேர்வு செய்து விளம்பரம் செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

Share This