யேமன் மீதான அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி

யேமன் மீதான அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி

யேமனின் வடக்கு மாகாணமான சாடாவில் ஆப்பிரிக்க குடியேறிகளை தடுத்து வைத்திருந்த தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மையத்தில் 115 கைதிகள் இருந்ததாகவும், தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுத்திகளுடன் இணைந்த அல் மசிரா தொலைக்காட்சி கூறுகிறது.

மேலும் 50 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்குரிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் அதிகாரப்பூர்வ சபா நிறுவனம், பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, டஜன் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், மீட்புக் குழுக்கள் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைத்து வருவதாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

 

Share This