அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 25 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 25 பேர் பலி

அமெரிக்காவில் கென்டக்கி மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சூறாவளி காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்டக்கியில் 18 பேரும் மிசோரியில் எழுவரும் உயிரிழந்ததாக கென்டக்கி மற்றும் மிசோரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூறாவளி காரணமாக சுமார் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்புகளும் அறுந்து வீழ்ந்துள்ளதாக மிசோரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த இரு மாநிலங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் சூறாவளி ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு முதல் கென்டக்கியில் ஒவ்வொரு மே மாதமும் சராசரியாக ஐந்து சூறாவளிகள் ஏற்பட்டுள்ளன, அதேவேளை மிசோரியில் சராசரியாக 16 சூறாவளிகள் ஏற்பட்டுள்ளன.

CATEGORIES
Share This