ஆசியக் கிண்ணம் 2025 – குழு பிஇல் கடும் போட்டி

2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இடம்பெற்றுள்ள குழு பிஇல் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி அணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குழு பிஇல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெறு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பங்களாதேஷ் அணி மூன்று லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ள நிலையில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடம்தில் உள்ளது.
எனினும், அந்த அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை காட்டிலும் சிறந்த நிகர ஓட்ட பெறுமதியை கொண்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியுன் நாளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கு தீர்க்கமான போட்டியாகும்.
இதில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின் தள்ளி முதலிடம் பிடிப்பதுடன், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
அதேநேரத்தில் இலங்கை அணி பெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிப்பதுடன், பங்களாதேஷ் அணி அடுத்தச் சுற்று தகுதிபெறும்.
எனவே நாளைய போட்டி இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தீர்க்கமானதாக மாற்றியுள்ளதுடன், அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அணிகள் மத்தியிலும் போட்டி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.