ஆசிய கிண்ணம் – குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை

ஆசிய கிண்ணம் – குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை

ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை இந்திய அணியின் குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீத்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

17வது ஆகிய கிண்ண தொடரின் இரண்டாவது லீக் போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீர அணிகள் மோதியிருந்தன.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீர அணி 13.1 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்திய சார்பில் 2.1 ஓவர்கள் வீசி ஏழு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் நான்கு ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.

Share This