அசலங்க அபாரம் சதம் – பங்களாதேஷ் அணிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

அசலங்க அபாரம் சதம் – பங்களாதேஷ் அணிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் சரித் அசலங்க அபார சதத்துடன் 106 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களையும், ஹசன் ஷகிப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

Share This