துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை

துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதையடுத்து, நீதவான் இந்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This