தென்கொரிய ஜனாதிபதி பிடியாணை உத்தரவு

தென்கொரிய ஜனாதிபதி பிடியாணை உத்தரவு

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணைக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யூன் சுக் இயோல் விசாரணை சிறப்புக் குழு அறிவித்துள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த மூன்றாம் திகதி (டிசம்பர்) நாட்டில் இராணுவ சட்டத்தை அறிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிய இடம்பெறுவதாக கூறி அவர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், நாடாளுமன்றமும் இராணுவத்தினார் கைப்பற்றப்பட்டது. எனினும், ஆறு மணி நேரத்தில் இராணுவச் சட்டம் மீளப் பெறப்பட்டது.

இதனால் யூன் சுக் இயோல் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

“இராணுவச் சட்டத்தை அறிவிப்பது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதத்தில் இராணுவ அதிகாரிகளுடன் யூன் சுக் இயோல் பேசியிருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் நுழைந்த இராணுவ வீரர்களிடம் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதித்திருக்கிறார்” என யூனுக்கு எதிரான மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மூன்று முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் மன்றில் ஆஜராகாத நிலையில், தற்போது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், யுனுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிக்கிடத்தக்கது.

Share This