டயானா கமகேவிற்கு பிடியாணை

டயானா கமகேவிற்கு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது. பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Share This