
பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளது இராணுவம்
பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை அந்நாட்டு இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இருநாட்டு எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. இதனால் எல்லையோர மாகாணங்களில் பாகிஸ்தான் இராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருககிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் இராணுவம் 3 மாகாணங்களில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளன.
