அர்ஜூன மகேந்திரன் விரைவில் கைது செய்யப்படுவார்

அர்ஜூன மகேந்திரன் விரைவில் கைது செய்யப்படுவார்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் காலநடை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், எமது நாட்டில் அரசாங்கத்திற்கு மேலாக ஒரு அரசு செயற்படுகிறது.

அத்தோடு குற்றங்களுக்கான ஒரு அரசும் செயற்படுகிறது. அந்த குற்றங்களுக்கான அரசை நாம் இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறன.

அதில் ஒரு அங்கமே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலின் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகும். எமது நாட்டுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்.

அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ரணிலின் நண்பர், சிங்கப்பூரில் இருக்கும் அர்ஜூன மகேந்திரனையும் நாம் கைது செய்து அழைத்து வருமோம் என தெரிவித்துள்ளார்.

Share This