அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, நீதிமன்றினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது மருமகனின் நிறுவனத்துக்கு மத்திய வங்கியின் பிணைமுறி பத்திரங்களை வழங்கி, அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த பின்னர், குறித்த அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிப்பதாகக் கூறப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )