உமிழ்நீரில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா?

உமிழ்நீரில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா?

உமிழ்நீர் சுரப்பிகளால் உற்பத்தியாகும் உமிழ்நீர் ஒரு தெளிவான நீர் நிறைந்த திரவமாகும். இது நமது வாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன்படி உமிழ்நீரின் பயன்கள் குறித்து பார்ப்போம்.

வறட்சியான உணவுகளை உட்கொள்ளும்போது அந்த உணவை ஈரப்பதமாக்கி விழுங்குவதற்கு இலகுவாக்குகிறது.

வாயில் உள்ள பக்டீரியாக்கள், உணவுத் துகள்கள் போன்றவற்ற கழுவ உதவி வாயை சுத்தமாக்குகிறது.

உமிழ்நீர் புரதங்கள் மற்றும் கொழுப்புக்களை கிரகிக்க உதவும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

செரிமானத்தை இலகுவாக்குகிறது. உமிழ்நீரிலுள்ள கல்சியம், பாஸ்பேட் போன்ற தாதுக்கள் பற்களை மீளுருவாக்கம் செய்கின்றன.

உணவின் சுவையை அனுபவிக்க அனுமதிக்கிறது. வாய்வழி ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

Share This