மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா எம்.பியின் அணி

மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா எம்.பியின் அணி

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக மாவட்டங்களில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட ராமநாதன் அர்ச்சுனா வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினார்.

தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது அணியினர் ஆலோசித்துவரும் பின்புலத்தில், மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அர்ச்சுனா எம்.பியின் சில செயல்பாடுகள் மற்றும் கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This