நாய் என்று தன்னை கூறியமைக்காக அமைச்சர் சந்திரசேகரை சபையில் வாட்டி எடுத்த அர்ச்சுனா எம்பி

நாய் என்று தன்னை கூறியமைக்காக அமைச்சர் சந்திரசேகரை சபையில் வாட்டி எடுத்த அர்ச்சுனா எம்பி

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”
அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை நடுக்கடலில் கொண்டு விட்டாலும் அது நீரை நக்கியே குடிக்கும். அவர் சபையில் இல்லாவிட்டால் நான் சொன்னதாக அவருக்கு இதை யாராவது கூறுங்கள் என அர்ச்சுனா எம்பி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  அர்ச்சுனா எம்பி இவ்வாறு கூறினார்.

”வாசித்து அறிந்து கொள்ளக் கூட தெரியாத கை நாட்டை வடக்குக்கு அமைச்சராக வழங்கியுள்ளது இந்த அரசாங்கம்.
நான் இந்த அரசாங்கத்தின் மீது பெரும் மதிப்புக்குரியவன். என்பதால் ஏதாவது சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.

வரவு செலவுத் திட்டத்தின் மொத்த தொகை
8835 பில்லியன் . அதில் வரவு 4590 பில்லியன். 4245 பில்லியன் கடன் பெற வேண்டிய தேவை உள்ளது.

இதுவே வரவு செலவுத் திட்டத்தின் ஒரு மேலோட்டக் கணிப்பு.  8835 பில்லியன் தொகையை அரசாங்கம் தந்திருக்கின்றது.

வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு உபயமாக தருவது 93 பில்லியன் ஆகும். அந்த வகையில் இந்த அரசாங்கம் யாரோ விட்ட தவறுக்காக இந்த தொகையை தேட வேண்டியுள்ளது.

ஊழல் செய்ய மாட்டோம் என்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம். அந்த வகையில் சுகாதார அமைச்சுக்கான போக்குவரத்து செலவு 475 மில்லியனாக காணப்படுகின்றது. 2024ல் 405 மில்லியன் தான் செலவிடப்பட்டுள்ளது. 361 மில்லியனே 2003 ஆம் ஆண்டில் செல விடப்பட்டுள்ளது. அந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நீங்கள் தற்போது ஒதுக்கியிருப்பது அதிகமாகும்.

அத்துடன் பாதுகாப்பை விட சுகாதாரத்துக்கே நாங்கள் அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை விட உங்களுடைய பாதுகாப்பு செலவினம் அதிகம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டை விட விட இந்த ஆண்டிற்கு சுகாதாரத்திற்காக ஒன்பது வீதமே அதிகமாக ஒதுக்கி இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share This