நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் எல்லயஸ் ஆகியோர் நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (07) ஆரம்பமானது.
இதன்போது நியமனங்கள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா டிசம்பர் 18 ஆம் திகதி அரசாங்க நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கத்தது.