அரசின் கொள்கைகளை விளக்க இந்திய விஜயத்தில் அநுர திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இந்தியப் பயணத்தின் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுர திட்டமிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பது, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தப் பயணத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அதேநேரம், டில்லி மற்றும் கொழும்புக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மின்சக்தி துறையில் இந்திய முதலீடுகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.