
ஸ்பெயினில் மீண்டும் ஒரு பயங்கர ரயில் விபத்து – 37 பேர் காயம்
ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
வடகிழக்கு ஸ்பெயினைப் பாதித்த கடுமையான பனிப்புயல்களின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்டு வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பெயினில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 40 பேர் வரையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
