கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்

கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகளும் ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்று கூறியிருப்பது சிக்கலானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்படை மேற்கொண்ட உயிர்காக்கும் நடவடிக்கைக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )