மற்றுமொரு பரீட்சை வினாத்தாள் கசிந்தது

மற்றுமொரு பரீட்சை வினாத்தாள் கசிந்தது

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தரம் தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை நிலவரப்படி எட்டு மண்டலங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்திருந்தன. இந்த விவகாரம் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This