அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்த வாரம் மற்றுமொரு கலந்துரையாடல்

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கை பிரதிநிதிகள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வரிக்குறைப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தூதுவருக்கும் இடையே நிகழ்நிலை ஊடாக கடந்த 25 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அமெரிக்கா அறிவித்தது.
இந்த வரி வீதத்தை மேலும் குறைக்க அரசாங்கம், அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.