2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இதன்படி, 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த.உயர் தரம், பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும்.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் ஐந்தாம் திகதி வரை நடைபெறும்.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும்.
பொதுத் தகவல் தொழில்நுட்பம் 2026 ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி நடைபெறும்.
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் எட்டு முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.