ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 18 வயது பெண்…

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 18 வயது பெண்…

குஜராத் கச் மாவட்டம் கந்திராய் கிராமத்தில், 18 வயது பெண்ணொருவர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் பொறுப்புப் படை மற்றும் எல்லை பாதுகாப்ப படையினர் குறித்த பெண்ணை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்ணுக்கு தேவையான ஒட்சிசன் அளிக்கப்பட்டு அவரது நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தொடர்ந்தும் இதேபோல் பல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அண்மையில் ராஜஸ்தான் கீரத்பூர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுமி மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

அதேபோல் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் கடந்த மாதம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 10 வயது சிறுவன் மீட்கப்பட்டும் உடல் நலம் குன்றி உயிரிழந்தான்.

இவ்வாறு எத்தனையோ குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இதற்காக என்ன நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளன?

ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்புடன் காணப்பட்டால் இதுபோன்ற அநியாய உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்கலாம்.

இன்னும் எத்தனை உயிரிழப்புகளுக்கு பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்? இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.

Share This