நாட்டின் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறும் மதுபானக் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை மேலும் தெரிவித்துள்ளது.