ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும் அபாயம்

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும் அபாயம்

ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான Ver.di, தரைவழி பணியாளர்கள், பொருட்களை கையாளுபவர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விமான ரத்துகள் உட்பட புறப்பாடு மற்றும் வருகையில் முக்கிய கட்டுப்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடையும் என்று தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் காரணமாக ஹாம்பர்க் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

“வேலைநிறுத்தங்கள் ஒரு முழு நாட்டையும் விமானப் போக்குவரத்திலிருந்து துண்டித்து வருகின்றன” என்று விமான நிலைய சங்கமான ADV இன் நிர்வாக இயக்குனர் ரால்ப் பீசல் கூறினார்.

இந்நிலையில், “பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கமான தீர்வைப் பெறுமாறு Ver.di-இடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share This