விமானத்தில் பயணித்த 49 பேரும் பலி

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பகுதியை மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் இருந்தனர்.
இது குறித்து, “ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் திடீரென ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதியைக் கண்டறியப்பட்டுள்ளது.” என்று ரஷ்யாவின் அவசரகால அமைச்சு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
“இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
49 பேர் பலி? விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவே அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், டின்டா விமான நிலையத்தை நெருங்கும் போது ரேடாரில் இருந்து மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.