பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, கார் ரேஸிங் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்றுள்ள சுமார் 15 வருடங்களுக்குப் பின் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கார் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாறிருக்க பயிற்சியின் போது அஜித் ஓட்டிக் கொண்டிருந்த கார் ரேஸ் ட்ரக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தினால் காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் எவ்வித காயமுமின்றி அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.