விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்

விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்

சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் விமான நிலைய வளாகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவும் பிரதான பிரச்சினையாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இயலாமையே என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல்வேறு முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படும் போது சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக 2023ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட வேண்டிய பிரதான திட்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ஜனக ருவன் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This