
காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைகளை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் முன்னதாக ஆரோக்கியமற்ற நிலைகள் பதிவாகின, காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள் முறையே 92 மற்றும் 100 ஐ எட்டிதாக கூறப்படுகிறது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்புகள் நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு அளவுகள் 48 முதல் 112 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மிதமான காற்றின் தரம் எதிர்பார்க்கப்பட்டாலும், யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் 100–108 மற்றும் 104–112 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொனராகலை சிறந்த காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காலை 8:00–10:00 மணி முதல் பிற்பகல் 3:00–5:00 மணி வரையான நேரங்களில் அதிக மாசுப்பாடு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக அளவீடுகள் உள்ள பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
