இலங்கையில் காற்றின் தரம் – பாதிப்பு பொதுமக்களுக்கு எச்சரிகை
இலங்கையில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை முகக்கவசங்களை அணியுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப்பரிசோதனை பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி , காலி , இரத்தினபுரி , எம்பிலிப்பிடிய, புத்தளம் , பதுளை ,திருகோணமலை , பொலனறுவை ஆகிய பகுதிகளில் அதிகளமாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குருநாகல் , கண்டி , காலி , நுவரெலியா , முல்லைத்தீவு ,மட்டக்களப்பு , களுத்துறை , மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.
இதேவேளை சுவாசம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
(செய்தி – கோ.திவ்யா)