டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு

டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு

 

இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானதாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )