
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் இன்று (18) காலை இவ்வாறு அவசரமாக விமானம் கொச்சினில் தரையிறக்கப்பட்டுள்ளது.
