
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் பதவி விலகினார்
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் இலங்கை (தனியார்) லிமிடெட்டின் தலைவர் பதவியில் இருந்து ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விலகியுள்ளார்.
2024 ஒக்டோபரில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் கூற்றுப்படி, நிறுவனத்திற்குள் வரவிருக்கும் பல கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த பதவி விலகலை தொடர்ந்து, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள அந்தப் பதவியின் கடமைகளை மேற்பார்வையிட பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TAGS Air Chief Marshal Harsha AbeywickramaAirport & Aviation Services Sri Lanka (Private) Ltd.Harsha Abeywickrama
